Sunday, April 29, 2012

அந்த ஒரு ரயில் பயணம்

எனக்கு ரொம்ப நாள் ஆசை இப்படி ஒரு தமிழ் ப்ளாக் எழுதனும்னு கடசியா இப்போ தான் அது நிறைவேருது ... கடந்த வாரம் முழுதும் என்னோட சொந்த ஊரான தூத்துக்குடி ல என்னோட குடும்பத்தார் மத்தில தான் இருந்தேன். ஒவ்வொரு முறை நான் முத்து நகர் ரயில் வண்டில பயணிக்கும் போதும் எனக்கு அந்த ஒரு பயணம் தான் ஞாபகத்துக்கு வருது.. !


வைடிங் லிஸ்ட்ல இருந்த ஒரு பயண சீட்டு வச்சிட்டு தூத்துக்குடில இருந்து சென்னைக்கு பயணிக்கும் போது ஏற்பட்ட அந்த சந்திப்பு இன்னும் என் மனசுல ஒரு ஆழமான ஒரு அழகான சந்திப்பா இருக்குது. தாமதமா ரயில்வே ஸ்டேஷன் னுக்கு வந்த எனக்கு கிடைச்சது படிக்கட்டு பக்கத்துல இரண்டு அடிக்கு ஒரு இடம். அத மூன்ற பங்கிட்டு உக்கார வேண்டிய ஒரு சூழ்நிலை. இதுவும் நமக்கு ஒரு புதுமையான அனுபவம் தானே என்று எண்ணி உகார்ந்துடேன். பக்கத்துல வந்த ஒரு வாலிப நண்பர் பேச தொடங்கினாறு .. வேற என்ன வழி ? பேசி தானே ஆகணும் ! அம்மா குடுத்த பிரியாணியா பகிர்ந்து சாப்பிடும் போது ஆரம்பிச்சது எங்க நட்பு !

அது வர எனக்கு அவர் ஒரு சாதரணமான வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்குற ஒரு சகோதரனாக தான் தென்பட்டாறு .. ஆனா பேச ஆரம்பிச்ச பின்ன தான் தெரிந்தது அவருக்குள்ள பல விஷயங்கள் மூடிகிடகிறது என்று ! அவரோட சம்மதத்தோட அவரோட கதைய உங்ககிட்ட சமர்பிக்குரேன்.. அதுக்கு முன்னாடி என்னோட எழுத்து பிழைகள தயவு செய்து மன்னித்து கொள்ளனும்..

நான் இன்று ஒரு காவல் துறை நண்பன இருக்கேன் டா, என்னோட பள்ளி பருவத்துல திவ்யானு ஒரு பொண்ண விரும்பினேன் .. (இவரும் பாதிக்க பட்ருகாரு போல ) அவங்க வீட்ல ரொம்ப ஒழுக்கத்தோட வலந்தாங்கனு அடி கடி சொல்லுவா.. (எல்லா பொண்ணுங்களும் அத தானே பாஸ் சொல்லறாங்க ) நான் காவல் துறை பயிற்சிகளுக்கு செல்லும் போதெல்லாம் அவளோட பேசுறது உண்டு, அவ அப்போ மருத்துவ துறைல இருந்தா.. நல்ல படிக்குற பொண்ணு, எப்படியோ என்ன விரும்பிட்டா டா. என்னக்கும் அவனா உயிறு. எங்க இருந்து வந்தாங்கனு தெரில்ல அவளோட அத்தை, அவங்களுக்கு ஜாதி மதத்த விட என்னோட இந்த போலீஸ் உத்தியோகம் பிடிகலயாம். ஆரம்பத்துல இருந்தே இதையே சொல்லிட்டு இருந்தாங்க, ஒரு சின்ன பயம் இருந்தது டா மனசுல, எங்க இதெல்லாம் நடந்துருமோனு... யாரு கண்ண வச்சாங்களோ தெரியல, எதிர்பார்த்த மாதிரியே அந்த அத்தை என்னோட வாழ்க்கைல பாஸ்கட் பால் விளயாடிடாங்க டா. என்னோட அப்பா அவரும் ஒரு காவல் துறை அதிகாரி தான், அவர் கிட்ட வந்து என்னோட சேர்கை சரி  இல்லாததாகவும் என்னோட இந்த பழக்கம் எதுவும் சரி இல்லாததாகவும்  சொல்லி என் பேர்ல ஒரு புகார் குடுத்துடாங்க..சொல்லவா வேனும் எங்க அப்பாவுக்கு ? அந்த பொண்ணுக்கு எதுவுமே தெரிய கூடாதுனு அவங்க அத்தை கேட்டு கொண்டதால நானே என்னோட காதலுக்கு முற்றுபுள்ளி வச்சே ஆகவேண்டிய ஒரு கஷ்டமான சூழ்நிலைய எங்க அப்பா உருவாக்கிவிட்டாறு . எனக்கு என்ன செய்யனு தெரியல டா, பொண்ணு கிட்ட போய் என்னனு சொல்லுவேன் ?? எப்படி இந்த உறவ முறிக்க சொல்லுவேன் ? இதுக்கெல்லாம் என்ன காரணம் சொல்லுவேன் ? ஒன்னுமே புரியாம சிக்கிதவிச்சேன்..

எல்லா தெய்வங்களையும் கும்பிட்டுவிட்டு போனேன், எல்லா தயிரியமும் வர வச்சிட்டு போய் சொன்னேன், எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு, எங்க அப்பா தெளிவா சொல்லிடாங்க என்ன மறந்துரு அப்படின்னு .. இதுக்கு மேலையும் என்னால உன்கிட்ட உண்மைய மறைக்க முடியாது, இது தான் உண்மைனு சொல்லி முடிச்சிட்டேன் .. கத்தி கதறி கூச்சல் போட்டு உலகத்துல இருக்குற எல்லா தகாத வார்த்தைகள வைத்து என்ன திட்டிட்டு கெளம்பிட்ட.. என்னால ஆண்வர்கமே அணைக்கு அவகிட்ட இருந்து திட்டு வாங்குச்சு ! அது வர எனக்கு ஒரு வலி தெரியல, எங்க அப்பா சொன்னது ஒரு விதத்துல சரியா தான் பட்டுச்சு, அதுல ஒரு லாஜிக் இருந்துச்சு.. எப்படி போயும் போயும் என்ன போல ஒரு சாதாரண காவல் துறை அதிகாரிக்கு ஒரு மருத்துவ துறைல உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து குடுப்பாங்கனு..

வருஷங்கள் போச்சு, எல்லதயுமே மறந்துட்டு ஒரு அமைதியான வாழ்கைய வாழ்ந்துட்டு இருந்தேன். மேற்படிப்புக்காக பெங்களுரு போயிருந்தேன், அப்போ என்னோட கூட வேல செய்யுற பலரை சந்திக்க நேர்ந்தது. கூட்டதுல ஒரு தெரிஞ்ச முகம். எங்க ஊர் பொண்ணு ஒருத்தியும் அந்த பயிற்சி முடிக்க வந்துருந்தது அப்போ தான் தெரியவந்தது.என்ன ஒரு ஆச்சரியம், நம்ம ஊரு பொண்ணு அதுவும் இங்க, என்ன ஒரு வியப்பு ! பயிற்சி முடிவுல அவளே வந்து என்கிட்ட பேசினா, ரொம்ப நல்ல பொண்ண தெரிஞ்ச (முதல எந்த பொண்ணு தான் டா தப்பான பொண்ண தெரியுரா ? ) நல்ல பேச துடங்கினோம், பத்து நாள் பயிற்சி முடியும் போது எங்களோட நட்பு ரொம்ப நெருக்கமா மாறிடுச்சு.. எனக்கும் பிடிச்சிருந்துச்சு..அவளுக்கு என்ன ரொம்பவே பிடிச்சிருந்துச்சு ! அவளோட வயசுக்கு அவ ரொம்ப தெளிவாகவும் ரொம்ப திறமையான பொன்னாகவும் தெரிஞ்ச.. அதனால , அதனால ?! அவளையே திருமணம் செஞ்சிக்கலாம்னு முடிவு பண்ணினேன்.. அவளுக்கு ரொம்ப சந்தோசம், தல கால் தெரியாம குதிக்க ஆரம்பிச்சிட்டா. அத பார்த்த நான் ரொம்ப  குடுத்துவச்சவன்னு நானே பாரட்டிகிட்டேன், எல்லாம் நல்லபடியா போய்கிட்டே இருக்க, அவளோட வீட்ல பேசவேண்டிய நேரம் வந்துச்சு.

அதே தொழில் செய்யுற அந்த பையன மணந்து கொள்ள விருப்பம்னு அவங்க வீட்ல அவல பேச சொன்னேன் .. பேசிட்டு வந்த மறுநாளே காணாம போன குழந்தைய போல எங்க வீட்ல மறுத்துட்டாங்க, எங்க அப்பாக்கு இதுல சுத்தமா இஷ்டம் இல்லையாம் மறந்திட சொல்லிடாங்கனு பாதர்த்தம, எதார்த்தம சொன்ன டா..எனக்கு ஒன்னுமே புரியல..என்னடா நடக்குது இங்க ? நல்ல நிலமைல இருக்குற எனக்கு கட்டிகுடுகுரதுல என்ன பிரேச்சனயாம் ? எதுக்குமே பதில் வரல .. உடஞ்சி போய்டேன்.. கண்ணெல்லாம் கலங்கி, கதறி அழுதேன்.. துடைக்க யாருமே வரல டா.கோவிலுக்கு போன ஆறுதலா இருக்கும்னு அங்க போய் அமைதியா உக்கார்ந்து இருந்தேன்.. அப்போ தான் ஒரு பழக்கப்பட்ட குரல், எப்படி டா இருக்க ??? அப்படின்னு.. திரும்பி பார்த்த திவ்யா ஒரு தக்ஷன தட்டோட ..என்ன டா கோவில் பக்கமா வந்துருக்க ? அது உனக்கு ரொம்ப புதுசாச்சேனு சொன்னா !! என்னால என் துக்கத சொல்லாம இருக்க முடியல, நடந்தத எல்லாம் சொன்னேன்.. சொல்லி முடிக்குரதுக்கு முன்னாடியே அவளோட கண்ணும் கலங்கிருச்சு. வருத்தபடாத டா, அவ எந்த நிலமைல இந்த முடிவ எடுத்தாலோ ? கடவுளுக்கு தானே தெரியும்..


4 வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கு சொன்னது இததானே டா !! அப்போ எனக்கு எங்க அத்தை உங்க அப்பாவா சந்திச்சதும் என்ன சொன்னாங்கனும் தெரியாது, நீ எந்த நிலமைல இருந்தனும் தெரியாது.. அப்போ தெரிஞ்சாதேல்லாம் ஒரு விதமான ஏமாற்றம், ஒரு கோபம். ஆனா இன்னைக்கு எனக்கு தெரிஞ்சத போல உனக்கும் ஒரு நாள் உண்மை தெரியும், அதுவர வலி தாங்கித்தான் ஆகவேண்டும். அவ பாவம் டா, நான் உன்ன சபிச்ச மாதிரி அவள சபிச்சுராத.. அப்பறம் உனக்கு ஏற்பட்ட மாதிரி ஒரு இழப்பு அவளுக்கும் ஏற்படபோகுது.. அன்னைகே திவ்யா கிட்ட கண்ணீர் மல்க மண்ணிப்பு கேட்டேன் டா.. நம்ம என்ன விதைகிறோமோ அத அறுத்து தான் ஆகவேண்டும் !! அப்படின்னு கண்ணீரோட அவர் கதைய முடிசிகிட்டாறு, கேட்ட எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, பகிர்ந்துகனும்னு ஆசைப்பட்டேன் .. அதனால தான் இன்னைக்கு இப்படி ஒரு ப்ளாக் போஸ்ட் மூலமா பகிர்ந்துகிறேன்..

அன்புடன்,
வினி5 comments:

 1. wini, just wanted to make sure .. names are unreal right ? :)

  ReplyDelete
 2. last photo of yours evokes this sentence in me: வணக்கம் . பாசத்திற்குரிய உங்கள் பாரதி ராஜா.. Steady . ஆக் ஷேன்

  ReplyDelete
  Replies
  1. Athae than da!! Oru director touch theriyuthae!!! :)

   Delete